தர்மம்

தருமர் மட்டுமா உலகில் இருக்கிறார்?
சகுனி களாகவே அநேகர் திரிகிறார்!
தருமர் …தருமம் நீதி என நிற்க
சகுனிகள் சூழ்ச்சி செய்தே ஜெயிக்கிறார்!
தருமர் மட்டுமே வாழும் உலகுக்கு
தருமம் சரி; ஆனால் சகுனிகளே மிகப்
பெருமளவில் புழங்கும் உலகினில்
பிழைக்க சூழ்ச்சியும் கற்பதே நல் வழி!

தரும வழிவிட்டு மாறாது…சூழ்ச்சியால்
சரிகளைக் காக்கத் தயங்காது …அதர்மத்தை
சரிக்கச் சாணக் கியத்தின் துணைகொண்டு
தடை தகர்த்திட யுக்திகள் மேற்கொண்டு
வரங்கள் பெற்றிட வேண்டும்! தவமும் நல்
வழியில் செய்திட வேண்டும்! அவரவர்க்–
குரிய நீதி கைக் கொண்டு …சகுனிகள்
குனிய…தருமர்கள் நிமிர்ந்திட வேண்டுமாம்!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!