வருடம் முழுவதிலும் வருந்தி
அழவைத்து,
வருடத்தில் ஓர்நாள் 
வணங்கி மகிழ்ந்து தொழும்
‘அன்னையர்’ தினமும் ‘தந்தையர் தினமும்’
என்னென்று உந்தன் இதயத்தை
மாறவைக்கும் ?
உன்னிதயம் காய்ந்து
துடிக்கின்ற கல்லாச்சே….
என்றுந்தன் இதயத்தில்
அன்பீரம் ஊறவைக்கும்?