தூர்

இரவுதனைத் தூர் வாரி
எங்கே தான் கொட்டிற்றோ ….
வருமிந்தப் பகற்பொழுது?
மாலை வாடப்… பகல் தன்னை
தூர்வாரி எங்கேதான் கொட்டிடுமோ
துயர் இரவு?
யார் இவற்றை அறிந்தார்கள்?
யார் இத் ‘தூர்’ பார்த்தார்கள்?
இரவைப் பகலும்
பகலை இரவுமாய்
சரிக்குச் சரியாய் தூர்வாரும்
போட்டியிலும்
உலகத்தின் தூர் மட்டும்
வாரப் படாமற் தான்
அழுக்கேறிக் கிடக்குதது
ஆர் அதன் தூர் வாரவுள்ளார்?

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!