நிஜம்

கனவெல்லாம் கலைகின்ற காலம் ஆச்சு!
கண்களின் முன் நனவின் சாயம் வெளுத்துப் போச்சு!
சனிமாற்றம் நிரந்தரமாய்த் துயர் தந்தாச்சு!
சபை சந்தியில் மானம்…. வேண்டும் ஏச்சு!
முனிப்பயங்கள் அற்று சடலங்கள் இல்லா
முற்றத்தில் நடைப்பிணமாய்த் தொடரும் வாழ்வு!
தனித்தவிலே அடிக்கின்றோம் எங்கும்; சேர்ந்து
தனித்தாழத் தடுக்கிறது பிரிவின் வீச்சு!

பிறழ்வு மனம் கொண்டு சுய நலத்தைக் காத்தால்
பிரித்தாழ முனைவார்கள்….பிய்த்து மேய்வோர்.
முறைதவறிச் சொந்த இலாபம் மட்டும் பார்த்தால்
முடியாது நாம் ஆழ…வராது நன் நாள்!
குறைகளைந்து மக்கள் சார்பாய் சேவை செய்து
குலமேன்மை இலக்கென்று கொண்டி ராத
அரசியல்தான் சன ஆட்சி யினது மிச்சம்!
அதற்குள் எங்கே விடிவு வரும்? தொடரும் அச்சம்!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!