நோக்கு

மீன்களின் கண்களுக்கு விளங்கும்
கடல் நீளம்.
ஆந்தையின் கண்கள் அறியும் 
இரவின் ஆழம்.
சீயத்தின் கண்களுக்குப் புரியும்
வனத்தின் எல்லை.
மான்களின் கண்கள் உணரும்
புலியசைவு.
வான்கழுகின் கண்கள் தெளியும்
ஆகாச உச்சம்.
ஏன் எமது கண்களுக்குத் தெரிவதில்லை
எதிர் காலம்?

நன்றி – கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!