புதுக்கவி

“ஆடத் தெரியாதோன்…..
மேடை சரி யில்லை”யென்ற
வேடிக்கை தாண்டி
விவகாரமாய் நின்ற
ஆடத் தெரியாதோன்….
ஆட்ட முறை எதற்கு?
ஆடை அணியெதற்கு?
அங்க சோடனை எதற்கு?
சூடும் நகை எதற்கு?
சொல்லும் ஜதி எதற்கு?
பாடும் சதங்கை, பண், நட்டுவாங்கம்
ஏன்? எதற்கு?
மேடை எதற்க்கென்று
வில்லங்கமாய்ச் சினந்து…
மேடை தகர்த்து ….வெளி, தரையில்
தன் கால் கை
போன திசையில்
தனக்குப் புரிந்தபடி
ஆடி… ‘ஆடலிலே வல்லோன்’ யான் என்றோதி
யாரும் தன ஆட்டத்தை
பார்த்து இரசிக்கலையே
ஏன் என்றும் கேட்கின்றான்!
ஏற்காரைத் திட்டுகிறான்!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!