புரிதல் இல்லா வாழ்வு

புரிதல் இல்லாமல் கழியும்
ஒவ்வொரு இரவும்..
நரகத்து வாசலின்
முதல் படிகள்..
———
நான் தூங்கும் சில நாளிகையிலும்
தூக்கமின்றி தவிக்கும் சில நினைவுகள்
கொல்லைப்புறத்தில் வாடிய கொவ்வைச் செடியாய்
சொல்லப்படாத சில வார்த்தைகள்,
———–
செல்லரித்த வாழ்க்கையை
வாழத்துடிக்கும் இதயத்தில் சில
அறைகள் இடம்மாறி துடிக்கிறது.
விடியும் வரை விடிவுமில்லை…முடிவுமில்லை.

ஆக்கம் – சுதன்

Sharing is caring!