பொங்கு..நீ பொங்கு

காயம் விழப் பொங்கு.
கவலை அழப் பொங்கு.
காதல் உடன் பொங்கு.
கவிதை வரப் பொங்கு.
ஆசை கெடப் பொங்கு.
அன்பைத் தொடப் பொங்கு.
பால் விட்டுப் பொங்கு .
பசி சுட்டுப் பொங்கு.
தாழ்வு படப் பொங்கு.
தமிழ் சுடரப் பொங்கு .
வீரத் துடன் பொங்கு.
விவேகம் எழப் பொங்கு.
காலம் வரும் பொங்கு.
கடமைசெய்து பொங்கு.
ஊர் நிமிரப் பொங்கு.
உரிமைகேட்டுப் பொங்கு.
ஞானம் உறப் பொங்கு.
நியாயம் பெறப் பொங்கு.
வாழணும் நாம் பொங்கு.
வருடத் தொடக்கமிது….
சூரியனெம் தெய்வம்;
தொழு!
அவன் போல் நிதம்பொங்கு!

நன்றி கவிஞர் த.ஜெயசீலன்

Sharing is caring!