வெம்பிப் பழுத்தவை ….?

வெம்பிப் பழுத்தவை
நிரம்பிக் கிடக்கின்றன
ஊர் தோறும்
சந்தி தெருக்களில்
திரள் திரளாக
முட்டி மோதி
இரட்டை சில்லில் சாகசித்து
முந்திச் சாகத் துடிக்கின்றன
தெரு வீதிகளில்.

வெட்டிப் பேச்சு புட்டித் திரவம்
வாய் நீளும்
உடம்பு வளையாது
வளர்த்த தேகம்
அப்பன் உழைத்த காசும்
உவன் பாவம் என
வந்து கொட்டும் டாலரும் பவுண்ஸ்சும்
இவனில் உருக்கொண்டு ஆடுகின்றன.

இன்னும் ஒரு பரம்பரை
இப்படியே ஆனால்
வெற்று பேச்சு
அரசியலுக்கு தேவையே இல்லை

இந்த மண்ணும்
இனிய மொழியும்
காணாமல் போனோர் பட்டியலில்
சேரும்.

நன்றி கவிஞர். எம்.கே.முருகானந்தன்

Sharing is caring!