அடேங்கப்பா…. ஒரே டீம் இத்தனை முறை வேல்டுகப்பை ஜெயிச்சிருக்கா?

1975 – 2015 வரை நடைபெற்றுள்ள 11 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில், ஆஸ்திரேலிய அணி மட்டும் 5 முறை வேல்டுகப்பை தட்டிச் சென்றுள்ளது. அதுவும் 1999, 2003, 2007 என தொடர்ந்து மூன்றுமுறை கோப்பை கைப்பற்றி  அந்த அணி “ஹாட்ரிக்” சாதனைப் படைத்துள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக, 1975, 1979 -ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும் 1983, 2011 -இல் இந்திய அணியும் உலக்கோப்பையை வென்றுள்ளன. 1992 -இல் பாகிஸ்தானுக்கு, 1996 -இல் இலங்கை அணியும் வேல்டுகப்பை வென்றெடுத்துள்ளன.

1983 -இல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, யாரும் எதிர்பாராதவிதமாக வலுவான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, உலகக்கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி தலைமையிலான அணி 2011 -இல் மீண்டும் கோப்பையை கைப்பற்றி,  ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க செய்தது.

Sharing is caring!