அணி சதம்…..கோலி, ரோகித் அரைசதம்

உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 59 பந்தில் அரைசதம் அடித்தார். நடப்பு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக கோலி அடிக்கும் 5-ஆவது அரைசதம் இதுவாகும். மேலும், 22 ஓவர்களுக்கு இந்திய அணி 100 ரன்களை தொட்டது. இதையடுத்து, 65 பந்தில் ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்தார்.

முதல் 10 ஓவர்களுக்கு 28 ரன்கள் எடுத்த இந்தியா, அடுத்த 10 ஓவர்களுக்கு 55 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. ராகுல் டக் அவுட் ஆனது சோகம். ஸ்கோர் நிலவரம்: 112-1 (24 ஓவர்கள்) கோலி 57, ரோகித் 55.

Sharing is caring!