அதிகாரத்தில் நீடிப்பது தொடர்பிலேயே அதிக அக்கறை

விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த அநேகமான அதிகாரிகள் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் அதிகாரத்தில் நீடிப்பது தொடர்பிலேயே அதிக அக்கறை காட்டுவதாக தொலைத்தொடர்புகள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தேசிய விளையாட்டு சபைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களைக் கையளித்தல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால செயற்றிட்டங்களை முன்வைத்தலுக்கான நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்நிகழ்வு இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Sharing is caring!