அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர்… புகழ்ந்து தள்ளிய விராட் கோலி

மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது. அவர் மிகவும் புத்திசாலித்தனமானவர் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் கேப்டன் விராட் கோலி.

மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் அதிரடியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

பின்னர் பேட்டியளித்த விராட் கோலி ‘இது பேட்டிங்குக்கு சிறந்த ஆடுகளம் அல்ல. கடைசி கட்டத்தில் நாங்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும், டோனி, ஜாதவ் ஜோடியினர் சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டனர்.

டோனியை நினைத்து ஒரு அணியாக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். டோனி குறித்து வெளியில் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது. அவர் மிகவும் புத்திசாலித்தனமானவர். அணிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவரை, அவரது போக்கிலேயே விட்டுவிட வேண்டும்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்நாயகன் விருது பெற்ற டோனி கூறுகையில், 4-வது பேட்டிங் வரிசையில் நான் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். நாம் எந்த வரிசையில் பேட்டிங் செய்கிறோம் என்பதை விட அணியின் சமச்சீர் தன்மை மாறக்கூடாது. அது தான் முக்கியம். பேட்டிங்கில் நான் எந்த வரிசையிலும் களம் காண தயாராக இருக்கிறேன். மீண்டும் 5 அல்லது 6-வது வரிசை என்றாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!