அதிவேக ஸ்டெம்பிங் செய்து அசத்திய தோனி

நியூசிலாந்து:
அதிவேக ஸ்டெம்பிங் செய்து அசத்தி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி.

ஆஸ்திரேலியா தொடரை தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்த நிலையில், நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் லூகி ஃபெர்யூசனை அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்து கிரிக்கெட் ரசிகர்களை அசர வைத்தார் தோனி.  இந்நிலையில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ரோஸ் டெய்லரை கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டெம்பிங் செய்து நியூசிலாந்து வீரர்களை மிரள வைத்தார்.

வெறும் 0.08 நொடிகளில் இந்த ஸ்டெம்பிங்கை செய்தார் தோனி. இவர் ரன் ஓடுவதில் மட்டுமல்ல, ஸ்டெம்பிங் செய்வதிலும் சிறுத்தை வேகத்தில் செயல்படுவது இந்திய அணிக்கு மிகுந்த பலத்தை கொடுத்து வருகிறது. தோனியின் அண்மைகால போட்டி செயல்பாடுகள் அவர் மீதான விமர்சனங்களை உடைத்தெறிந்து வருகிறது. அதனால் உலகக் கோப்பையில் தோனி விளையாடுவதோடு, இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!