அனுஸ்கா – கோலியின் மதிப்பு 1000 கோடி ரூபா

இன்னும் இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி – அனுஷ்கா சர்மாவின் நிகரமதிப்பு ரூ.1000 கோடியை தாண்ட உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்சமயம் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இங்கிலாந்து மண்ணில் சோபித்ததே இல்லை என்ற அனைவரது எண்ணத்தை தற்போது மாற்றி அமைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முக்கிய புள்ளியாக விளங்குகிறார்.

கோலியுடன் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். பிரபலங்களில் மிகப்பெரிய வலுவான ஜோடியாக இருவரும் வலம் வருகின்றனர். தங்களது தொழிலில் இவர்கள் ஜொலிப்பதுடன், வருமானத்தையும் அதிகமாக ஈட்டிவருகிறார்கள். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் ‘விருஷ்கா’ ஜோடி இடம் பெற்றது.

இந்த நிலையில், பெர்செப்ட் ப்ரொஃபைல் நிறுவனம் விருஷ்காவின் நிகர மதிப்பை கணக்கிட்டுள்ளது. விராட் கோலியின் நிகர மதிப்பு 60 மில்லியன் டாலர் (ரூ.383 கோடி) ஆகும். போட்டி கட்டணம், ஐ.பி.எல் ஒப்பந்தம் மற்றும் பிராண்ட் அம்பாஸடராக, கோலி சம்பாதித்து வருகிறார்.

அனுஷ்கா சர்மாவின் நிகர மதிப்பு 35 மில்லியன் டாலர் (ரூ.220 கோடி). இந்த ஜோடியின் பிராண்ட் மதிப்பு 95 மில்லியன் டாலர் (ரூ.600 கோடி).

பெர்செப்ட் ப்ரொஃபைல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநரான ஷைலேந்திரா சிங் கூறுகையில், “இந்திய பிராண்ட் மார்க்கெட்டிக்கே, இது மிகப்பெரிய தருணம். இருவரும் வலுவான மற்றும் வாய்ப்புகளுடன் கூடிய ஒரு சக்தி வாய்ந்த ஜோடி. இதனை நான் எளிதில் கணிப்பேன். விருஷ்காவின் நிகர மதிப்பு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரூ.1000 கோடியை எட்டும்” என்றார்.

Sharing is caring!