அமெரிக்காவில் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை

அமெரிக்காவின் அரிசோனாவில் நடைபெற்ற அரை மரதன் ஓட்ட போட்டியில் வெண்கல பதக்கத்தை இலங்கையை சேர்ந்த ஹிருணி ஜயரட்ண பெற்றுள்ளார்.

ஹிருணி இந்த போட்டியை 14நிமிடங்கள் 19 விநாடிகளில் நிறைவு செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிறிட்னி பவர் தங்கப்பதக்கத்தையும், பிரித்தானியாவைச் சேர்ந்த ரோசி எட்வட்வஸ் வெள்ளி பதக்கத்தை பெற்றனர்.

ஹிருணி ஏற்கனவே 14.7 நிமிடங்களில் அரை மரதன் பந்தயத்தை முடித்து, இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் டோஹா நகரில் நடைபெறும் உலக மெய்வல்லுனர் போட்டியில் கலந்துக்கொள்ளும் நோக்குடன் இவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் 2020 ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இவர் கலந்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!