அரையிறுதிக்கு இலங்கை கிரிக்கெட் அணி தகுதி

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இலங்கை அணி தகுதிப்பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடனான போட்டியில், 52 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.

கட்டுநாயக்கவில் நடைப்பெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதான 61 ஓட்டங்களைப் பெற்றார்.

அஹான் விக்ரமசிங்க 73 ஓட்டங்களையும், அணித்தலைவர் நிபுன் தனஞ்ஜய 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரிஷாப் முகர்ஜி 65 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றது.

அனுஷ் டென்டன் 68 ஓட்டங்களையும், ஒஸ்மா ஹசான் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நவோத் பரணவிதான 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரொஹான் சஞ்ஜய 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் பி குழுவில் போட்டியிடும் இலங்கை புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது.

இலங்கை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!