அர்ஜுனா விருது வென்ற தமிழர்..!!!

இந்தியாவில் 20 ஆண்டுகளுக்குப் பின் பாடி பில்டிங் துறையில் தமிழர் ஒருவர் அர்ஜுனா விருது வென்றுள்ளார்.

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

ஆனால் இதில் பல துறைகளுக்கு கடந்த சில வருடங்களாக விருது வழங்கப்படவே இல்லை.

முக்கியமாக பாடி பில்டிங் துறைக்கு 20 வருடமாக விருது வழங்கப்படவே இல்லை.

அதன்படி சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடி பில்டிங் துறையில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் இந்த வருடம் அர்ஜுனா விருது வென்றார்.

“தமிழக மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள். நான் தேசிய, ஆசியா, மற்றும் உலக அரங்கில் 2018ல் தங்க பதக்கம் வென்றேன்.

அதேபோல் 2003லேயே தெற்காசியாவில் தங்க பதக்கம் வென்றுள்ளேன். இதை எல்லாம் மரியாதை செய்யும் விதமாக அவர்கள் விருது வழங்கி இருக்கிறார்கள்.

எங்களின் பெடரேஷனில் இருந்து விருதுக்கு விண்ணப்பிக்க சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி செய்தேன். அதேபோல் தற்போது அர்ஜுனா விருது கிடைத்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!