அறிமுக போட்டியிலேயே சைனி மிரட்டல் பவுலிங்: இந்தியாவுக்கு 96 ரன்கள் டார்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பவுலர்களின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆட்டத்தின் முதல் ஓவரில் 2-ஆவது பந்திலே விக்கெட் எடுத்து வாஷிங்டன் சுந்தரும், தனது அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து சைனியும் அசத்தினார்கள்.

நீண்ட இடைவெளிக்குபிறகு அணிக்கு திரும்பிய பொல்லார்ட் அதிகபட்சமாக 49 ரன்களும், பூரான் 20 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும், வந்த வேகத்திலேயும் பெவிலியன் திரும்பினார்கள்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சைனி 4 ஓவர்கள் வீசி, 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Sharing is caring!