அவங்க ரொம்ப டேஞ்சரான ஆளுங்க…சொல்கிறார் கோலி!

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன.

இத்தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி என்பதால், அதனை வெற்றி கணக்குடன் தொடங்க வேண்டும் என இந்திய அணி வீரர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

அதேசமயம், இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளதால், சௌத்தாம்டனில் நாளை நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி குறித்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி லண்டனில் செய்தியாளர்களிடம் இன்று கூறியது:
தென்னாப்பிரிக்கா எப்போதும் அபாயகரமான அணி தான். அணியில் யார் இருந்தாலும், இல்லையென்றாலும், இருப்பவர்களை கொண்டு வெற்றிக்காக போராடும் சிறப்பான அணி. எனவே, அவர்களை எந்த விதத்திலும் எளிதாக கருதாமல், நாளைய போட்டியில் வெற்றிப்பெறும் நோக்கில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கோலி தெரிவித்தார்.

Sharing is caring!