அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்..இந்திய அணியில் இடம்பிடிக்கத் தவறிய நடராஜன்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.

கடந்த சில நாட்களாகவே மூன்றாவது போட்டிக்கான அணியில் இந்திய வீரர்கள் யார் யார் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்ற செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா எந்த ஆர்டரில் விளையாடுவார் என்ற கேள்வியும் அதிகம் இருந்தது. இந்நிலையில், தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நடராஜன் டெஸ்ட் அணியில் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் இடம்பெறவில்லை.அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமாக உள்ளார். மேலும் ரோகித் சர்மாவும் துவக்க வீரராக விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாற்றங்களைத் தவிர, மற்றபடி அணியில் மாற்றங்கள் இல்லை ரஹானே தலைமையிலான இந்திய அணி இந்த மூன்றாவது போட்டியை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் அதே அளவு சம பலத்துடன் ஆஸ்திரேலிய அணியும் இருப்பதால், நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராட்டத்தை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இந்த போட்டி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. – மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி இதோ : 1) ரஹானே 2) ரோஹித் 3) கில் 4) புஜாரா 5) விஹாரி 6) பண்ட் 7) ஜடேஜா 8) அஷ்வின் 9) பும்ரா 10) சிராஜ் 11) நவ்தீப் சைனி

Sharing is caring!