அவுஸ்திரேலியா அணிக்கு 40% அபராதம் … டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளும் பறிப்பு!

மெல்போர்னில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி தவறிய அவுஸ்திரேலிய அணிக்கு அபராதமும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் புள்ளிகளையும் குறைத்து ஐசிசி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி தவறிய நிலையில், இதுகுறித்து நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், அணி வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் மற்றும் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன் படி அவுஸ்திரேலியா அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 சதவீதம் மற்றும் 4 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஐசிசி எலைட் மேட்ச் ரெப்ரீ டேவிட் பூன் பிறப்பித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 4 தொடரிகளில் 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி டிரா என மொத்தம் 322 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

இந்திய அணி 5 தொடர்களில் 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள், 3 தோல்விகள் என மொத்தம் 390 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து அணி 300 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 292 4-வத இடத்திலம் உள்ளன.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி டிரா என மொத்தம் 322 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்திய அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகள், 3 தோல்விகள் என மொத்தம் 390 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து அணி 300 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

Sharing is caring!