அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இலங்கை அணி டெஸ்ட் அரங்கில் தொடர்ச்சியாக அடைந்த ஐந்தாவது தோல்வி இதுவாகும்.

மெல்போர்ன் கபா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியா 323 ஓட்டங்களையும் பெற்றன.

179 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 17 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தது.

அணித்தலைவர் டினேஸ் சந்திமால், குசல் மென்டிஸ், திமுத் கருணாரத்ன உள்ளிட்ட 6 துடுப்பாட்ட வீரர்களால் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற முடியாமற்போனது.

லஹிரு திரிமன்னே பெற்ற 32 ஓட்டங்களே இலங்கை அணி சார்பாக வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

நிரோஷன் திக்வெல்ல, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 24 ஓட்டங்களைப் பெற்றனர்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 139 ஓட்டங்களுடன் முடிவுக்கு வர போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றது.

பெட் கம்மிங்ஸ் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

Sharing is caring!