அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை காதல் திருமணம் செய்யும் தமிழ்ப்பெண்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை காதலித்து வரும் தமிழ் பெண்ணான வினி ராமன் வேறு இந்தியரை மணக்க வேண்டும் என கூறிய ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

வினி ராமன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். மெல்போர்னில் பிறந்து, அங்கேயே வசித்து வருகிறார்.

அவரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லும் கடந்த 2017 முதல் காதலித்து வருகின்றனர்.

இருவருக்கும் இந்தாண்டு இந்திய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதற்கிடையே கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். மறுபுறம் அவரை பிரிந்த சோகத்தில் இருந்தார் வினி ராமன்.

அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் மற்றுமொரு வார இறுதியை லாக்டவுனில் செலவு செய்ததாகவும், ஐபிஎல் நடக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தன் ஏக்கத்தை பதிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் அந்த பதிவின் கீழ் இந்திய ரசிகர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட வெள்ளைக்காரரை விட்டுவிட்டு, இந்தியரை பிடித்து விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி இருந்தார். அவரது வார்த்தைகள் மோசமாக இருந்தது.

இதை பார்த்து கடுப்பான வினி ராமன் அவரை விளாசி இருந்தார். நான் காதலிப்பதில் நிறம், நாடு, இனம் எல்லாம் பார்ப்பதில்லை. இணையத்தில் கண்ணனுக்கு தெரியாத யாரோ ஒரு ஆள் சொல்வதை கேட்டும் நான் வாழ்க்கை முடிவுகளை எடுப்பதில்லை என பதிலடி அளித்திருந்தார்.

Sharing is caring!