அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிகள்

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுவரும் இத்தொடரில் தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சரி தற்போது காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

…………

இன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியொன்றில், அமெரிக்காவின் சோபியா கெனின்னும், துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூரும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் சோபியா கெனின் வெற்றிபபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

…………

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரும், அமெரிக்காவின் டென்ய்ஸ் சாண்ட்கிரென்னும் மோதினர்.

இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்போட்டியில், 6-3, 2-6, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்குகளில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

………..

இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியொன்றில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச்சும், கனடாவின் மிலோஸ் ரஹோனிக்கும் மோதினர்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-3, 7-6, என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Sharing is caring!