அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்வது போன்று பேட்ஸ்மேனை ஏமாற்றிய வீரர்..!!!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மான்கட் முறையில் அவுட் செய்தது போன்று, தென் ஆப்பிரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் செய்து காட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, தமிழக வீரரான அஸ்வின் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அப்போது அவர் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்த பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

இதற்கு பெயர் ஜெண்டில் மேன் கிரிக்கெட்டா என்றெல்லாம் அஸ்வினை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்தனர். அதன் பின் அஸ்வின் மான்கவுட் முறையில் அவுட்டாக்குவது போன்று வீரர்கள் பலரும் போட்டியின் போது கிண்டல் செய்யும் விதமாக அதே போன்று செய்து காடினர்.

 

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 தொடரான பிபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் அஸ்வினைப் போன்று ஒரு மான் கட் செயல் நடைபெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் மோரிஸ் பந்து வீச வரும்போது கையிலிருந்து பந்தினை தவறவிட்டார்.

கிரீசுக்கு வருவதற்கு முன் பந்து கீழே விழுந்ததால் அதனை அப்படியே சமாளித்து ஸ்டம்ப் அருகே சென்று மான் கட் செய்வதுபோல துடுப்பாட்ட வீரரை ஏமாற்றினார்.

ஆனால் பந்து அவர் கையில் இல்லை என்பது தெரிந்து துடுப்பாட்ட வீரர் அவரை நோக்கி சிரிக்க மோரிசும் அவரைப் பார்த்து சிரித்து விட்டு பின்பு திரும்பி சென்றார்.

கிரிஸ் மோரிஸ் செய்த இந்த செயல் அஸ்வினின் மான்கட்டை ஞாபகப்படுத்தி உள்ளதாக கூறி இணையவாசிகள் அதை வைரலாக்கி வருகின்றனர்.

Sharing is caring!