ஆசியக் கிண்ண ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

ஆசியக் கிண்ண ஒரு நாள் போட்டியில், ஹொங்கொங் அணிக்கு எதிரான கடும் போட்டியின் பின்னர் 26 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற்றது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 285 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், ஷிகர் தவான் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.

120 பந்துகளை எதிர்கொண்ட ஷிகர் தவான், 127 ஓட்டங்களையும் அம்பாட்டி ராயுடு 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தநிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 285 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் கின்சிட் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

286 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய ஹொங்கொங் அணிக்கு, அதன் தலைலர் அன்ஷுமன் ராத் மற்றும் நிஸகாத் கான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்காக 174 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Anshuman Rath ஒரு சிக்ஸர் 12 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 92 ஓட்டங்களையும் Nizakat Khan 1 சிக்ஸர் 4 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 92 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய ஹொங்கொங் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 259 ஓட்டங்களைப் பெற்று 26 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

பந்துவீச்சில் யுஷ்ஷேந்திர சகால் 3 விக்கெட்களையும் குல்திப் யாதவ் 2 விக்கெட்க்களையும் கைப்பற்றினர்.

Sharing is caring!