ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை மோதவுள்ளன.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் 1983 ஆம் ஆண்டு சார்ஜாவில் ஆரம்பமாகியது.

முதலாவது தொடரில் சாம்பியனான பெருமை சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.

அன்று முதல் இதுவரை நடைபெற்ற 13 தொடர்களில் இந்தியா 6 தடவைகளும் இலங்கை 5 தடவைகளும் பாகிஸ்தான் 2 தடவைகளும் சாம்பியனாகியுள்ளன.

இந்த முறை தொடரில் இலங்கை நடப்பு சாம்பியனாக களமிறங்குகின்றது.

இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் A குழுவிலும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் B குழுவிலும் போட்டியிடுகின்றன.

இலங்கையும் பங்களாதேஷூம் மோதும் முதல் போட்டி துபாயில் இலங்கை நேரப்படி நாளை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மைதானத்தில் பங்களாதேஷ் இதற்கு முன்னர் ஒரு போட்டியிலேனும் விளையாடியதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!