ஆசிய குண்டெறிதலில் இந்வியாவிற்கு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் டூர் தங்கப் பதக்கம் வென்றார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 7-வது நாளில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் டூர் 20.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் லியு யங் 19.52 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், கஜகஸ்தானின் இவான் இவானோவ் 19.40 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மேலும் மகளிருக்கான ஸ்குவாஷ் அரை இறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், நடப்பு சாம் பியனான மலேசியாவின் நிக்கோல் டேவிட்டை எதிர்த்து விளையாடினார். இதில் தீபா பல்லிகல் 7-11, 9-11, 6-11 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த அவர், வெண்கலப் பதக்கத்தை பெற்றார். இதேபோல் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 1-3 என்ற கணக்கில் மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியனிடம் தோல்வியடைந் தார். இதனால் ஜோஷ்னா சின்னப் பாவும் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இதேபோல் ஆடவருக்கான அரை இறுதியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 2-3 என்ற கணக்கில் ஹாங்காங்கின் சூன் மிங்கிடம் தோல்வியடைந்து வெண் கலப் பதக்கம் பெற்றார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலத்துடன் 29 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 8-வது இடம் வகித்தது. சீனா 72 தங்கம், 51 வெள்ளி, 30 வெண்கலத்துடன் 153 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

Sharing is caring!