ஆசிய கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி

அபுதாபி:
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தியுள்ளது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. சுனில் செத்ரி இரண்டு கோல் அடிக்க, தாய்லாந்தை சுலபமாக வீழ்த்தியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின், லீக் சுற்றில் இந்திய அணி, தாய்லாந்தை சந்தித்தது.

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில், ‘பெனால்டி ஏரியாவில்’ குருனியனை ‘பவுல்’ செய்ததால், இந்தியாவுக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு தரப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் சுனில் செத்ரி அசத்தலாக கோல் அடித்தார். 33வது நிமிடத்தில் தாய்லாந்திற்கு கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் டாங்டா கோலாக்க, முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலையை எட்டியது.

46வது நிமிடத்தில் இந்திய வீரர் உடான் சிங் தந்த பந்தை பெற்ற செத்ரி இரண்டாவது கோல் அடித்தார். 68வது நிமிடத்தில் அனிருத் தபா பந்தை வலைக்குள் அனுப்பி அசத்தினார். தன் பங்கிற்கு ஜீஜே (80வது நிமிடம்) கோல் அடிக்க, இந்திய அணி 4-1 என வெற்றி பெற்றது.

Sharing is caring!