ஆசிய துடுப்பு படகு போட்டியில் இந்தியா தங்கம் வென்றது

ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு பிரிவில் இந்தியா தங்கம் வென்றது

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

தொடர்ந்து நடந்த இரட்டையர் படகுப் போட்டி பிரிவில் இந்தியாவின் ரோஹித் குமார் மற்றும் பகவான் தாஸ் ஜோடியும் வெண்கல பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்கம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பெறும் 12 வது வெண்கல பதக்கம் இதுவாகும்.

இதனையடுத்து துடுப்பு படகுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்க பதக்கம் வென்றுள்ளது. இதில் சவார்ன் சிங், ஓம் பிரகாஷ், டட்டு பாபன் போகனல், சுக்மித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதுவரை இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 10 வது இடத்தில் உள்ளது

Sharing is caring!