ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழ் ஆணழகன் – அவமானப்படுத்திய விளையாட்டு துறை அமைச்சு

ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை சார்பாக வெண்கலப்பதக்கத்தை வென்றெடுத்த மாதவன் ராஜ்குமாருக்கு தேனீர் கோப்பையை விளையாட்டு துறை அமைச்சு வழங்கியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தமாதம் 27,28,29 திகதிகளில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை சார்பில் மாதவன் ராஜ்குமார் பங்கேற்றிருந்தார்.

அங்கு 30 நாடுகளின் வீரர்களுடன் போட்டியிட்டு, மாதவன் ராஜ்குமார் 3ம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

இதன்மூலம், எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி டுபாயில் இடம்பெறும் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க மாதவன் ராஜ்குமார் தகுதிப்பெற்றுள்ளார்.

இந்நிலையில் நாடு திரும்பிய ராஜ்குமாருக்கு விளையாட்டு அமைச்சிலிருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், அமைச்சிற்கு சென்ற ராஜ்குமாருக்கு தேனீர் கோப்பையொன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை தன்னார்வலர்களின் நிதியுதவியினால் பயிற்சிகளை மேற்கொண்டு, இந்த உயரத்தை எட்டிய ராஜ்குமாருக்கு உரிய கௌரவத்தை விளையாட்டு அமைச்சு வழங்கி, அவர் உலக சம்பியன் போட்டியில் கலந்துகொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பலரும் கூறியுள்ளனர்.

Sharing is caring!