ஆசிய போட்டியில் மகளிர் ஹாக்கி அணிக்கு வெள்ளிப்பதக்கம்

ஜகார்த்தா:
மகளிர் ஹாக்கி அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

ஆசிய மகளிர் ஹாக்கி பைனல் போட்டியில் இந்திய, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

தோல்வியடைந்த இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
தங்கபதக்கம் வென்ற ஜப்பான் அணி 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

இந்த ஆசிய விளையாட்டு பதக்கப்பட்டியலில் இந்தியா, 13 தங்கம், 22 வெள்ளி, 29 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் 8 வது இடத்தில் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!