ஆசிய போட்டியில் வெற்றி… வீரர்களுக்கு பரிசு அறிவிப்பு

சென்னை:
இந்திய வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் தமிழக வீரர்கள் சரத்கமல் அமல்ராஜ், சத்தியன் ஆகிய 3 பேர் உட்பட 5 பேர் கொண்ட அணி வெண்கல பதக்கம் வென்றது.

தொடர்ந:து வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மூன்று வீரர்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!