ஆசிய விளையாட்டில் தங்கம் பறிப்பு….தமிழக வீரருக்கு சோகம்

ஆசிய விளையாட்டு போட்டிகளின் 8வது நாளான இன்று, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் லக்ஷ்மன் கோவிந்தன் வென்ற வெண்கல பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் நிலையில், இன்று தமிழக்தை சேர்ந்த ஜி லக்ஷ்மன் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் பங்கேற்ற ஒரே இந்திய வீரரான இவர், 29 நிமிடங்கள் 44.91 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். அவர் வெண்கல பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் அவர் விதியை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. போட்டியின் நடுவே, பந்தய கோட்டை தாண்டி வெளியே அவர் கால் வைத்ததால் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!