ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர்களை பிரதமரை சந்தித்தனர்

புதுடில்லி:
வாழ்த்து… வாழ்த்துப் பெற்றனர் இந்தியாவிற்கு மெடல்கள் வாங்கி பெருமைத் தேடி தந்த வீரர்கள்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் – வீராங்கனைகள் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 தங்கம் உள்பட 69 பதக்கங்களை இந்தியா குவித்தது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் நாடு திரும்பினர்.

அவர்களுக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் விளையாட்டு துறை அமைச்சர் ரத்தோரை சந்தித்தனர். தொடர்ந்து டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தி பேசிய பிரதமர் மோடி, பின்னர் வீராங்கனைகள் டூட்டிசந்த், ஸ்வப்னா பர்மன், ஹிமா தாஸ் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து பாராட்டினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!