ஆப்கானிஸ்தானிடம் போராடி வென்றது இந்தியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எனினும் இந்த வெற்றி கடும் போராட்டத்திற்கு பின்பே கிடைத்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. 225 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை துரத்திய ஆப்கான் வீரர்கள் துவக்கத்தில் மிக அற்புதமாக விளையாடினர். எனினும், ஆட்டத்தின் பாதியில் விக்கெட்டுகள் மெல்ல மெல்ல சரியவே ஆட்டம் தடுமாறியது.

அந்த அணியின் நவாப் மிக அருமையாக விளையாடி ஆப்கான் வெற்றிக்காக இறுதி வரை போராடினார். கடும் நெருக்கடிக்கிடையே அரைசதமும் கண்டார். ஆயினும், கடைசி ஓவர் வீசிய முகமது ஷமி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆப்கான் அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இறுதியில் இந்திய அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தன் 50வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Sharing is caring!