ஆமா… பல பொண்ணுங்களோட எனக்கு தொடர்பு தான்… பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பிரபலம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் -உல் -ஹக், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். அதேசமயம் இவர், வாட்ஸ் -அப்பில் பல பெண்களை தொடர்பு கொண்டு, அவர்களுடன் உரையாடி அவர்களின்  உள்ளம் கவர் கள்வனாக முயற்சித்துள்ளார்.

ஹக் தொடர்பில் இருந்த பெண்களில் சிலர், அவர் தங்களுடன் நடத்திய வாட்ஸ் -அப் உரையாடலை (சாட்டிங்), அண்மையில் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்டதுடன், இதன் மூலம் அவர் தங்களை தவறாக வழிநடத்தியுள்ளார் எனவும் குற்றச்சாட்டினர்.

இதையடுத்து இமாம் -உல்- ஹக்கிற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தமது இந்த செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்வதாக ஹக் இன்று தெரிவித்துள்ளார்.

இமாம் -உல் -ஹக், பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான இம்சமாம் -உல் – ஹக்கின்  நெருக்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!