ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா? ஏக்கத்தில் நியூசிலாந்து!

நியூசிலாந்து:
இன்றைய போட்டியிலாவது ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்று ஏக்கத்தில் இருக்கிறது நியூசிலாந்து அணி.

இந்தியா-நியூஸிலாந்து அணிகளிடையே இன்று 4வது ஒருநாள்  போட்டி நடக்கிறது. ரோஹித் சர்மா தனது 200வது ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார். தொடரை இழந்த நிலையில் நியூஸிலாந்து ஆறுதல் வெற்றி பெற போராட வேண்டிய நிலையில் உள்ளது.

தோனி நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. 2013ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த நியூஸி., அணி சொந்த மண்ணில் மானத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் பார்ம்மில் இல்லாதது பெரும் சிக்கலாக உள்ளது. இந்திய பேட்டிங்கை காலி செய்யும் பிட்ச்களும் இல்லை, பந்து வீச்சும் நியூஸிலாந்து அணியில் இல்லை என்பதே எதார்த்தம். இதனால் இன்றைய போட்டியிலும் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தெரிகிறது. இந்திய அணியில் ஷுப்மான் கில் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளது நியூசிலாந்து.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!