ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை அணி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இலங்கை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்தது. வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 46வது ஓவரின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 247 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலியா 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sharing is caring!