ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் இந்தியா 234 ரன்கள் எடுத்துள்ளது

அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் 4வது நாள் ஆட்டத்தில் இந்தியா 234 ரன்கள் எடுத்துள்ளது.

அடிலெய்டு டெஸ்டில் 4 வது நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அடிலெய்டில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களும் ஆஸ்திரேலியா முதன் இன்னிங்சில் 235 ரன்களும் எடுத்திருந்தன.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி இன்றைய 4 வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய வீரர் புஜரா அபாரமாக விளையாடி 71 ரன் சேர்த்து லியான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!