ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம், இந்திய அணி மோசமான தோல்வி அடைந்தது.

இந்நிலையில் மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

மனைவியின் பிரசவம் காரணமாக கோஹ்லி விடுப்பில் சென்றுள்ள நிலையில், காயம் காரணமாக இஷாந்த் சர்மா தொடரிலிருந்து விலகினார்.

இதற்கிடையே கை மணிக்கட்டு எலும்பு முறிவால் முகமது ஷமியும் விலகியுள்ளார், தற்போது இடது முழங்கால் காயம் காரணமாக உமேஷ் யாதவும் இரண்டு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதனால், சிட்னியில் 2021, ஜனவரி 7-ம் தேதி நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது.

எனவே அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளதால் அவரே அணிக்கு தேர்வாகலாம் என கூறப்படுகிறது.

Sharing is caring!