ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் அணியில் ஹபீஸ்

ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள பாகிஸ்தான் அணியில், அனுபவ வீரர் முகமது ஹபீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் அக். 7ம் தேதியும், 2வது டெஸ்ட் 16ம் தேதியும் தொடங்குகிறது.

இந்த போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் தொடக்க வீரர் முகமது ஹபீஸ் (37 வயது) நேற்று திடீரென சேர்க்கப்பட்டுள்ளார். ஹபீஸ் கடைசியாக 2016 ஆகஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த டெஸ்டில் விளையாடினார். அது அவரது 50வது டெஸ்டாகும், அதன் பிறகு அணியில் இடம் பிடிக்க முடியாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் உள்ளூர் போட்டியில் இரட்டை சதம் விளாசி தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்தார்.

பாகிஸ்தான் அணி: சர்பராஸ் அகமது (கேப்டன்), அசார் அலி, பகார் ஸமான், இமாம் உல் ஹக், முகமது ஹபீஸ், பாபர் ஆஸம், ஆசாத் ஷபிக், ஹரிஸ் சோகைல், உஸ்மான் சலாஹுதீன், யாசிர் ஷா, ஷதாப் கான், பிலால் ஆசிப், முகமது அப்பாஸ், ஹசன் அலி, வகாப் ரியாஸ், பாஹீம் அஷ்ரப், மிர் ஹம்சா, முகமது ரிஸ்வான்.

Sharing is caring!