இங்கிலாந்துக்கு எதிரான T20 இல் நியூஸிலாந்து வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் நியூஸிலாந்து 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

நெல்சன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சார்பாக மார்டின் கப்தில் 17 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார்.

அபாரமாக விளையாடிய கொலின் டி கிரேண்ட்ஹோம் 3 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசினார்.

ரொஸ் டெய்லர் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து 27 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

இருந்தபோதிலும், டாவிட் மலான் 55 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்று இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்வரிசையில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட நியூஸிலாந்தின் வெற்றி உறுதியானது.

இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியில் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூஸிலாந்து, 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 2 – 1 என முன்னிலை பெற்றுள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியும் இன்று நடைபெறவுள்ளது.

கென்பராவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று (05) பிற்பகல் 1.40 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

Sharing is caring!