இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்கு முழு உடல்தகுதியுடன் தயா விராட் கோலி

இங்கிலாந்து தொடரில் விளையாடுவதற்கு தான் முழு உடல்தகுதி பெற்றிருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்து புறப்பட உள்ள நிலையில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்துக்காக தான் முழு உடல் தகுதியுடன் உள்ளதாக விராட் கோலி தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அது விரைவாகக் குணமடைந்து தான் அடுத்த போட்டிக்கு தயாராகிவிட்டதாக கோலி தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்போம் என அவர் தெரிவித்தார்.

Sharing is caring!