இங்கிலாந்து- பிரான்ஸ் இடையிலான ரக்பி போட்டி இரத்து

ஹகிபிஸ் சூறாவளி காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை குறித்த உலகக் கிண்ண ரக்பி போட்டி நடைபெறவிருந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்கொட்லாந்து மற்றும் ஜப்பானுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டவாறு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!