இங்கிலாந்து வெற்றி….இலங்கை வெளியேற்றம்….

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரலிருந்து இலங்கை அணி வெளியேறியது.நேற்று பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில், இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் வெற்றியால் உலகக் கோப்பையிலிருந்து இலங்கை வெளியேறுவது உறுதியானது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கடினமாகி இருக்கிறது.ஆப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகளை தொடர்ந்து, நான்காவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது இலங்கை அணி. மேற்கிந்திய தீவு மற்றும் இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டிகள் முடிந்தவுடன், எதிர்வரும் யூலை 6ம் திகதி இலங்கை வீரர்கள் நாடு திரும்ப உள்ளார்கள்.1999 ஆம் ஆண்டிலிருந்து, உலகக் கோப்பைகளில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாத முதல் இலங்கை அணியாக திமுத் கருணாரத்னாவின் தரப்பும் பதிவானது.

Sharing is caring!