இங்கிலாந்தை தனி ஒருவனாக புரட்டி எடுத்த தமிழன் அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த அஸ்வினை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசன் ஹுசைன் உட்பட கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 134 ஓட்டங்களும், அதன் பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ஓட்டங்களும் எடுத்தது.

429 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தான் இங்கிலாந்து அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தமிழக வீரரான அஸ்வின் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து, 106 ஓட்டங்கள் எடுத்து, அபராக விளையாடினார். பேட்டிங்கிற்கு தடுமாறும் மைதானத்தில் அஸ்வினின் இந்த சதம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அதுமட்டுமின்றி முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை கதறவிட்டார். இப்போது பேட்டிங்கிலும் சதம் அடித்து மிரட்டியதால், அவரை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசைன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Well played Chennai’s Super King !! Brilliant 100 from Ravi Ashwin … என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று கிரிக்கெட் ரசிகர்கள், முன்னணி வீரர்கள் பலரும் அஸ்வினை பாராட்டி வருகின்றனர்.

Sharing is caring!