இங்கிலாந்தை வீழ்த்துமா?: இலங்கை பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹெட்டிங்கிலி மைதனாத்தில் இன்று நடைபெறவுள்ள 27-ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து – இலங்கை பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இங்கிலாந்து: ஜேம்ஸ் வின்சி, பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), பட்லர், ஸ்டோக்ஸ், மொயின் அலி, வோக்ஸ், ரஷீத், ஆர்ச்சர், மார்க்வுட்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குஷால் பெரேரா, அவிஷ்கா பெர்ணான்டோ, குஷால் மெண்டீஸ், மேத்யூஸ், திசாரா பெரேரா, ஜீவன் மெண்டீஸ், டி சில்வா, உதனா, மலிங்கா, நுவான் பிரதீப்.

Sharing is caring!