இந்தியாதான் உலக கோப்பையை வெல்லும்… சொல்கிறார் டூபிளெஸி

தென்னாப்பிரிக்கா:
இந்தியாதான் உலக கோப்பையை பெறும் என்று தென்னாப்பிரிக்கா கேப்டன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டூபிளெஸி கூறியதாவது:

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி வந்தவுடன் எங்களுக்கு ஒருவித அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் தகுதி முதலில் இந்திய அணிக்கு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

அதன்பின் இங்கிலாந்து அணிக்கு இருக்கிறது. இரு அணிகளுக்கும் இந்த முறை வாய்ப்பு இருக்கிறது. எங்கள் அணி பலமான அணி என்று நாளேடுகளில் வருகிறது. ஆனால், காகிதத்தில் மட்டும் பலமானது என்று இருந்தால் போதாது. கிரிக்கெட் என்பது காகிதத்தில் விளையாடும் விளையாட்டு அல்ல.

எதிரணிகள் இப்போதுள்ள நிலையில் எங்களுடன் மோதினால், உண்மையாகக் கூறுகிறேன் வலிமையான அணியாக நாங்கள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!